மகாராஷ்டிர மக்கள் நல்லதொரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தேசியவாத கங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கையையும் சரத் பவார் ஆதரித்தார்.
நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நாக்பூர் விமான நிலையத்தில் பொதுக்கூட்டங்களுக்கு முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மகாராஷ்டிர மக்கள் மாற்றத்தை விரும்புவதாக நாங்கள் உணர்கிறோம். அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க நாங்கள் பணியாற்ற வேண்டும். அதை நோக்கிச் செயல்பட்டு, நானும் எனது கட்சியில் உள்ளவர்களும் இன்று முதல் மகாராஷ்டிரம் முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைகிறோம்.
முன்னதாக ராகுல் நாக்பூருக்குச் சென்றபோது ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பவார்.. எனது கட்சியின் நிலைப்பாட்டை நான் கூறுவேன். கடந்த 3 ஆண்டுகளாக ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி வருகிறோம்.
நாட்டின் உண்மைகளைக் கொண்டுவரும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். முதற்கட்டமாக இடஒதுக்கீடு வரம்பை அதிகரிப்பது குறித்து முடிவை எளிதாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு உதவும். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு தெளிவு ஏற்படும். மேலும் ராகுல் சொல்வது நடந்தால், இதுஒதுக்கீடு சதவீதமும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.