Monday, September 23, 2024

மகாவிஷ்ணுவின் சர்ச்சை விடியோ யூடியூபில் இருந்து நீக்கம்!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

மூடநம்பிக்கை கருத்துகளை பரப்பி, மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய மகாவிஷ்ணுவின் விடியோவை யூடியூபில் இருந்து பரம்பொருள் அறக்கட்டளை நீக்கியுள்ளது.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளி விழாவில் பங்கேற்ற மகாவிஷ்ணு, முன்ஜென்ம பாவங்கள் காரணமாகவே தற்போது குறைகளுடன் பிறக்கிறார்கள் உள்பட பல்வேறு மூடநம்பிக்கை கருத்துகளை மாணவர்கள் முன்னிலையில் பேசினார்.

இவரின் பேசும்போதே அந்த பள்ளியின் மாற்றுத்திறன் ஆசிரியர் சங்கர், பள்ளிகளில் இதுபோன்று பேசக் கூடாது என்று வாதிட்டார்.

சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!

மகாவிஷ்ணு கைது

மகாவிஷ்ணு பேசிய விடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்ற நிலையில், சென்னை அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரை பாராட்டிய அமைச்சர், மூடநம்பிக்கை கருத்தையும், மாற்றுத்திறன் ஆசிரியரை அவதூறாக பேசியதற்கும் மகாவிஷ்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நிலையில், வெளிநாடு சென்றிருந்த மகாவிஷ்ணு கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியவுடன் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மகாவிஷ்ணு மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024