மக்களவைத் தலைவர்: கூட்டணிக் கட்சிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சு!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

மக்களவைத் தலைவர்: கூட்டணிக் கட்சிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சு!இந்தியா கூட்டணி வேட்பாளர் நிறுத்தினால், முதல்முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும்.ராஜ்நாத் சிங்ராஜ்நாத் சிங்

மக்களவைத் தலைவர் நாளை தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இந்தியா கூட்டணி தரப்பில் மக்களவைத் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தால் நாளை காலை மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெறும்.

அவ்வாறு நடைபெற்றால், நாட்டில் முதல்முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும். இதுவரை அப்பதவிக்கு தேர்தல் நடந்ததில்லை.

18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.

பாஜகவுக்கு (240) தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அக்கட்சி ஆட்சியமைத்தது.

இந்த நிலையில், மக்களவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு கட்டாயமாகியுள்ளது.

17-வது மக்களவையின் தலைவராக இருந்த ஓம் பிர்லா மீண்டும் தலைவர் பதவிக்கு விண்ணிப்பிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை இடைக்காலத் தலைவராகவுள்ள பா்த்ருஹரி மகதாப்பும் விண்ணிப்பிக்க வாய்ப்புள்ளது.

மேலும், கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தரப்பில் மக்களவைத் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க போகும் நபரின் பெயர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மக்களவைத் துணைத் தலைவர் பதவி பாஜகவுக்கா அல்லது கூட்டணிக் கட்சிக்கா என்பதும் தெரியவரும்.

You may also like

© RajTamil Network – 2024