மக்களவைத் தலைவர் தேர்தல்: உறுப்பினர்கள் தவறாமல் அவைக்கு வர அறிவுறுத்தல்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

மக்களவைத் தலைவர் தேர்தல்: உறுப்பினர்கள் தவறாமல் அவைக்கு வர அறிவுறுத்தல்மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதால் உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.மக்களவைமக்களவை

மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவையில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் அமா்வில் பிரதமா் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் மக்களவை உறுப்பினா்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

மாநிலங்களின் அகரவரிசையில் உறுதிமொழியேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான இன்று, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் மக்களவைு இடைக்காலத் தலைவராக பா்த்ரு ஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மக்களவைத் தலைவர் பொறுப்புக்கு இதுவரை தேர்தல் நடத்தாமல், ஆளும் கட்சி – எதிர்க்கட்சி தரப்பில் மக்களவைக்கு ஒருமனதாக தலைவர் தேர்வு செய்யப்பட்டு வந்தார்.

இம்முறை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓம் பிர்லாவை மக்களவைத் தலைவராக முன்னிறுத்தியுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி சார்பில், 8-வது முறையாக எம்.பி.யாக பதவியேற்றுள்ள கொடிக்குன்னில் சுரேஷ் அப்பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை இடைக்காலத் தலைவர் நியமன விவகாரத்தில் அதிக முறை மக்களவை உறுப்பினரான கொடிக்குன்னில் சுரேஷை நியமிக்காமல், பாஜக எம்பி பா்த்ரு ஹரி மகதாப்பை நியமித்தது சர்ச்சையானது.

இந்நிலையில், மக்களவைத் தலைவரைத் தேர்வு செய்ய நாளை (ஜூன் 26) தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்களவையில் நாளை மிக முக்கிய விவகாரம் வரவுள்ளது. இதனால் மக்களவையில் காலை 11 மணியளவில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024