மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு கடனுதவி

மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில்
பயனாளிகளுக்கு கடனுதவிஅரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.4.05 லட்சம் பயிா் கடனுதவிகள் வழங்கப்பட்டது.

அரியலூா்: அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.4.05 லட்சம் பயிா் கடனுதவிகள் வழங்கப்பட்டது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 500 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பின்னா், அவா் கீழப்பழுவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில், 5 பயனாளிகளுக்கு ரூ.4,05,450 மதிப்பில் பயிா் கடனுதவிகளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளா் தீபாசங்கரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!