Tuesday, September 24, 2024

மங்கள் உத்சவ் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட முகேஷ் அம்பானி குடும்பத்தினர்…

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டம்… மங்கள் உத்சவ் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமணத்தையொட்டி மங்கள் உத்சவ் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி முகேஷ்அம்பானியின் குடும்பத்தினர் சொகுசு காரில் நிகழ்ச்சிக்காக புறப்பட்டு சென்றனர்.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமண கொண்டாட்டங்கள் சுமார் ஓராண்டாக உலகமே வியக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் திருமண கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பிரதமர் மோடி வரை ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் 3 ஆம் நாள் கொண்டாட்டமாக மங்கள் உத்சவ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விளம்பரம்

ரிலையன்ஸ்க்கு சொந்தமான பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக ஆனந்த் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் புறப்பட்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

விளம்பரம்

நேற்று நடைபெற்ற சுப ஆசிர்வாத நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி, அவரது மனைவி சாக்ஷி மகள் ஜிவா, கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் சுனில் ஷெட்டி, அதியா ஷெட்டி, கே.எல். ராகுல், ரன்பிர் கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் வண்ணமிகு ஆடையில் தனியாக வந்து பலரின் கண்களுக்கு விருந்து படைத்தார். நடிகை ஸ்ரீதேவியின் மகளான குஷி கபூரும் கண் கவர் ஆடையில் கலக்கினார். நடிகர் ஷாருக் கான் தனது குடும்பத்தினருடன் வந்து விதவிதமாக போஸ் கொடுத்தார். நடிகர் சஞ்சய் தத், ரன்பீர் கபூர் ஒன்றாக அம்பானி மகனை வாழ்த்தும் நிகழ்ச்சிக்கு வந்தனர்.

விளம்பரம்இதையும் படிங்க – பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் தம்பதி

சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், கவுஷிக் சக்கரபோர்தி, சோனு நிகாம், ஹரிஹரன் உள்ளிட்ட பிரபலங்களும் இசை மழையில் மணமக்களை வாழ்த்தினர். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட்டை வாழ்த்தினர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

You may also like

© RajTamil Network – 2024