Sunday, September 22, 2024

மணற்சிற்ப சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்ற சுதர்சன் பட்நாயக்

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

சர்வதேச மணற்சிற்ப சாம்பியன்ஷிப்… தங்கப் பதக்கம் வென்றார் சுதர்சன் பட்நாயக்!சர்வதேச மணற்சிற்ப சாம்பியன்ஷிப்... தங்கப் பதக்கம் வென்றார் சுதர்சன் பட்நாயக்!

ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருதை வென்றார். இந்த சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டியானது கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஐகானிக் பீட்டர் மற்றும் பால் போர்ட்ரெஸ்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ள சர்வதேச அளவில் இருந்து 20 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் சுதர்சன் பட்நாயக் ஆவர்.

விளம்பரம்

“இங்கு நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்துடன் கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருதை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது மணற்சிற்ப கலை நாட்டிற்கு பெருமை சேர்த்தது மிகவும் பெருமைக்குரிய விஷயம்” என்று பீட்டர்ஸ்பர்க்கில் சுதர்சன் பட்நாயக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சர்வதேச மணல் சிற்பப் போட்டியில், 14ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கவிஞரான அவரது பக்தரான பலராம் தாஸ் உடன் தேர் மற்றும் ஜெகநாதரை சித்தரிக்கும் 12 அடி சிற்பத்தை வடிவமைத்திருந்தார்.

விளம்பரம்

“மஹாபிரபு ஜெகநாத் மற்றும் மணல் கலையின் நிறுவனர் பலராம் தாஸ் ஆகியோரின் மணல் சிற்பத்தை வெளிநாட்டில் உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. பூரியில் உலகப்புகழ் பெற்ற ரத யாத்திரை நடந்து வருகிறது. எனவே, மகாபிரபுவின் ஆசீர்வாதத்துடன் இந்த விழாவில் மகாபிரபு ஜெகநாதரின் மணல் ரதத்தை உருவாக்கியுள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:
சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகன்… இணையத்தை கலக்கும் நெகிழ்ச்சி வீடியோ!

மேலும், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் பட்நாயக்கின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதற்காக மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு வாழ்த்துக்கள் என்று இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ X வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது.

விளம்பரம்

இந்திய அரசால் ஏற்கனவே பத்மஸ்ரீ விருது பெற்ற சுதர்சன் பட்நாயக், உலகம் முழுவதிலும் 65க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் கலை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அவரது மணல் கலைகள் பல்வேறு சமூக செய்திகளை தெரிவிக்க முயல்கின்றன.

இதையும் படிக்க:
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் – வந்தே பாரத்… எந்த ரயிலின் ஸ்லீப்பர் பெஸ்ட்? – ஒரு அலசல்

மேலும், சர்வதேச மணற்சிற்ப சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த மாதம் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரையில் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. “கடலைக் காப்போம், பூமியைக் காப்போம்” என்ற தலைப்பில் இந்த மணற்சிற்ப போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 நாடுகள் பங்குபெறும் இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக சுதர்சன் பட்நாயக் பங்கேற்கிறார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Gold
,
International Award

You may also like

© RajTamil Network – 2024