Friday, September 20, 2024

மதுபானக் கொள்கை வழக்கு; கவிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15-ந்தேதி கைது செய்தனர்.

தொடர்ந்து ஏப்ரல் 11-ந்தேதி, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து கவிதா மீது கடந்த ஜூன் 6-ந்தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதற்கிடையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கவிதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கவிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

You may also like

© RajTamil Network – 2024