Saturday, September 28, 2024

மதுராவில் உணவு விஷமாகி 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

மதுரா,

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நேற்று நடந்த கோகுலாஷ்டமி பண்டிகையின் போது பக்வீட் மாவில் செய்யப்பட்ட பஜ்ஜியை சாப்பிட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பக்வீட் மாவில் செய்யப்பட்ட பஜ்ஜியை சாப்பிட்டதால் உணவில் விஷம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் பிரியங்கா கூறுகையில், நேற்று இரவு பக்வீட் மாவில் செய்யப்பட்ட பஜ்ஜிகளை சாப்பிட்டோம். அதன் பிறகு நான் வாந்தி எடுக்க ஆரம்பித்தேன் தொடர்ந்து வயிற்றில் எரியும் உணர்வு ஏற்பட்டது என்றார். இதேபோல நோயாளி ஒருவருடன் வந்த பார்காம் கிராமத்தை சேர்ந்த பார்காம் சிங், பஜ்ஜியை உட்கொண்ட பிறகு அங்கிருந்தவர்களுக்கு தலைச்சுற்றல், வாந்தி மற்றும் நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

வாந்தி மற்றும் பதட்டம் போன்ற புகார்களுடன் அதிகாலை 1 மணியளவில் சுமார் 29 நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட்டதாக ஒரு மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்தார். மேலும் வேறு சில நோயாளிகள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது மற்றும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024