மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் தென் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்பார்.
இதனிடையே, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமரணம் அடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 223-வது குருபூஜை விழா, கடந்த 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
இதையும் படிக்க : பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
மருது பாண்டியர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் , கடம்பூர்ராஜூ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக புறப்பட்டுச் சென்றார்.