மதுரை கள்ளழகர் கோவில் தேரோட்டம் தொடங்கியது.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று புகழப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழா சிறப்புடையதாகும்.

இந்த விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இன்று இரவில் புஷ்ப பல்லக்கு சேவை நடைபெறும்.

22-ந் தேதி தீர்த்தவாரி, 23-ந் தேதி உற்சவ சாந்தி நடக்கிறது. 4-ந் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெறும். இரவு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். அத்துடன் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவும், கோவில் நிர்வாகமும் செய்து வருகின்றன.

You may also like

© RajTamil Network – 2024