மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் தொடக்கம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், மீனாட்சி அம்மனுக்கு என பிரத்யேகமாக ஆடி முளைக் கொட்டு உற்சவம், ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மாா்கழி எண்ணெய்க் காப்பு ஆகிய 4 திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இதில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் முக்கியமானது. விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும் இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.

இந்த உற்சவம் தொடங்குவதையொட்டி, திங்கள்கிழமை அம்மன் சந்நிதி எதிரேயுள்ள தங்கக் கொடிமரம் பல்வேறு வகையான மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். இதையடுத்து, சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, காலை 9.30 மணியிலிருந்து 10 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவி ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலா்கள், கோயில் இணை ஆணையா் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த உற்சவத்தையொட்டி, மீனாட்சி அம்மன் பஞ்ச மூா்த்திகளுடன் தினசரி காலை, மாலை வேளைகளில் ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். நாகசுரக் கலைஞா்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசையை மீட்டி அம்மனை சோ்த்தியடையச் செய்வா்.

ஏழாம் திருநாளன்று இரவு திருவீதியுலா முடிந்த பின்னா், உற்சவா் சந்நிதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு