Sunday, September 22, 2024

மத்தியில் ஆட்சியமைக்குமா இந்தியா கூட்டணி? – அடுத்து என்ன நடக்கும்?

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மத்தியில் ஆட்சியமைக்குமா இந்தியா கூட்டணி? ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பாஜக-வின் ஆட்சி அமையக் கூடாது என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம் என்று கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

18-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மொத்தம் 234 இடங்களை கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைப் பெற, இன்னும் 38 இடங்கள் தேவைப்படும் நிலையில், அடுத்தகட்ட திட்டம் குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, மக்களின் தீர்ப்பு நரேந்திர மோடிக்கு எதிரானது என்றும், இது அவருக்கு தார்மீக தோல்வி என்றும் கூறினார். மோடிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய இழப்பு என்றாலும், மக்களின் விருப்பத்தைத் தகர்ப்பதில் அவர் உறுதியாக இருப்பதாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு… அடுத்து என்ன?

தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்குள் கொண்டு வந்து ஆட்சியமைக்க முயற்சி செய்யலாமா? அல்லது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்படலாமா? என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் ஆலோசனையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தை தொடர்ந்து வெளியே வந்த தலைவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துகொண்டனர்.

விளம்பரம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மோடி தலைமையிலான பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும் என்று கூறினார்.

பாஜக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி இருப்பதாகக் கூறிய விசிக தலைவர் திருமாவளவன், இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான எந்தவித சாத்தியக்கூறுகளும், முகாந்திரமும் இல்லை என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திராவில் பெரும்பான்மை வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசினார்.

விளம்பரம்

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற சந்திரபாபு நாயுடுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும், சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு மத்திய அரசில் முக்கியப் பங்காற்றுவார் என்றும், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று தான் நம்புவதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Congress
,
India Alliance
,
Mallikarjun Kharge
,
Rahul Gandhi

You may also like

© RajTamil Network – 2024