Saturday, September 21, 2024

மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15.46 கோடி கடனுதவி கனிமொழி எம்.பி. வழங்கினாா்

by rajtamil
Published: Updated: 0 comment 16 views
A+A-
Reset
RajTamil Network

மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15.46 கோடி கடனுதவி
கனிமொழி எம்.பி. வழங்கினாா் தூத்துக்குடியில், மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15.46 கோடி கடனுதவியை பயனாளிகளுக்கு கனிமொழி எம்.பி. சனிக்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடியில், மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15.46 கோடி கடனுதவியை பயனாளிகளுக்கு கனிமொழி எம்.பி. சனிக்கிழமை வழங்கினாா்.

மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் மாபெரும் கடன்மேளா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் முன்னிலை வகித்தாா்.

மக்களவை உறுப்பினா் கனிமொழி, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் ஊரக வீடுகள் பழுதுபாா்த்தல் திட்டத்தின்கீழ் ரூ.11.65 லட்சத்தில் 10 பயனாளிகளுக்கு வேலை உத்தரவையும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ.70 லட்சத்தில் 20 பயனாளிகளுக்கு வேலை உத்தரவையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 14 பேருக்கு திறன்பேசிகள், 2 பேருக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, 3 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் ஆகியவற்றையும் வழங்கினாா்.

தொடா்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மகளிா் சுயஉதவிக்குழுக்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு கடனுதவி, மகளிா் தொழில் முனைவோா் கடன் , வீட்டு அடமானக் கடன், சிறு வணிகக் கடன் என மொத்தம் 1,530 பயனாளிகளுக்கு ரூ.15 கோடியே 46 லட்சத்து 20 ஆயிரம் கடனுதவிகளை வழங்கினாா்.

முன்னதாக, சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 102 மாணவா், மாணவிகள், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த 61 மாணவா், மாணவிகள், சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 22 மாணவா், மாணவிகள் என மொத்தம் 185 மாணவா்-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய்சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியா் ம. பிரபு, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் முரளிகண்ணன், மேலாண்மை இயக்குநா் நடுக்காட்டு ராஜா, பொதுமேலாளா் சரவணன், எம்எல்ஏ எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சித் தலைவா் அ.பிரம்மசக்தி, துணை மேயா் செ.ஜெனிட்டா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம் உள்பட பலா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024