Wednesday, November 6, 2024

மத்திய மந்திரிசபை செயலாளராக டி.வி.சோமநாதன் நியமனம்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

டெல்லி,

மத்திய மந்திரிசபையின் செயலாளராக செயல்பட்டு வருபவர் ராஜீவ் கபா. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி முதல் ராஜீவ் கவுபா மத்திய மந்திரிசபை செயலாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ராஜீவ் கவுபாவின் பதவி காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், மத்திய மந்திரி சபையின் புதிய செயலாளராக டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் தற்போது மத்திய நிதி மற்றும் செலவீன துறை செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

அவர் வரும் 30ம் தேதி முதல் மத்திய மந்திரி சபை செயலாளராக பணியாற்ற உள்ளார். டி.வி.சோமநாதன் அடுத்த 2 ஆண்டுகள் (30.8.2026 வரை) மத்திய மந்திரி சபை செயலாளராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு அடுத்து மிகவும் அதிகாரம் மிக்க பதவியாக மத்திய மந்திரி சபையின் செயலாளர் பதவி பார்க்கப்படுகிறது.

மத்திய மந்திரி சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.வி. சோமநாதன், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராகவும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் நிர்வாக இயக்குனராகவும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024