Wednesday, September 25, 2024

மம்தாவிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்: பாஜக

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாதுகாக்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவின் ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் முதுகலை மருத்துவப் பயிற்சி பெற்றுவந்த மருத்துவர் கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

கலால் கொள்கை வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரியும், முதல்வர் பதவி விலகக் கோரியும் கொல்கத்தாவில் பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கு வங்க போலீஸார தடியடி நடத்திய சம்பத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களுடன் பேசினார்.

யானை சின்னம்: விஜய் மீது நடவடிக்கை எடுக்க பகுஜன் சமாஜ் மனு!

மேற்கு வங்கத்தில் என்ன நிகழ்ந்தாலும் கவலை அளிக்கிறது. நாட்டில் சர்வாதிகாரி யாரெனும் உள்ளனரா என்றால் அது மம்தா பானர்ஜிதான். உண்மை வெளிவர வேண்டும். மம்தா மற்றும் காவல் ஆணையர்களிடம் சிபிஐ, உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டாம்.

உண்மையை வன்முறையைக் கொண்டு அடக்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை எனக் கூறிய காவல்துறை ஆணையரும் பதவி விலக வேண்டும் மாணவர்களை அடக்கி அரசியலமைப்பை துண்டாடுவதற்கு ஒப்பானது. இதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024