Thursday, September 19, 2024

மருத்துவர்களை 5-வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைத்த மமதா!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், 5- ஆவது முறையாக பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் கடந்த மாதம் 9-ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளம் மருத்துவா்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அடுத்த முதல்வர் யார்? கேஜரிவாலை சந்திக்கிறார் மணீஷ் சிசோடியா!

நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மருத்துவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவைமீறி மேற்கு வங்க மருத்துவா்களின் போராட்டம் தொடா்கிறது.

மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த மேற்குவங்க அரசு, நேரலை செய்ய வேண்டும் என்ற அவர்களின் நிபந்தனையை ஏற்க மறுப்பதால் இன்னும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மருத்துவர்கள் போராடும் இடத்துக்கே சென்று முதல்வர் மமதா பேசினார். இதுவே என்னுடைய கடைசி முயற்சி என்றும் குறிப்பிட்டார்.

மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு! திருமாவளவன்

இந்தச் சூழலில், மேற்குவங்க அரசு 5- ஆவது முறையாக மருத்துவர்களை இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு முதல்வரின் இல்லத்திற்கு வருமாறு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது, ஆனால், பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது குறித்து பதிவு செய்யப்பட்டு இரு தரப்பினரின் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் பேச்சுவார்த்தைக்குச் செல்வது குறித்து மருத்துவர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024