Monday, September 23, 2024

மருத்துவ தேர்வு வினாத்தாள் டெலிகிராமில் விற்பனை? போலீஸ் விசாரணை!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

மருத்துவ தேர்வு வினாத்தாள் டெலிகிராமில் விற்பனை? வழக்குப்பதிந்து கேரள போலீஸ் விசாரணை!மருத்துவ தேர்வு வினாத்தாள் டெலிகிராமில் விற்பனை? வழக்குப்பதிந்து கேரள போலீஸ் விசாரணை!

வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வுக்கான (FMGE) வினாத்தாள் மற்றும் விடைத்தாள் விற்பனைக்கு இருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியானதையடுத்து, கேரள சைபர் போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு, இந்தியாவில் பயிற்சி பெற விரும்புபவர்கள் தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் எஃப்எம்ஜிஇ-யில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதி ஆகும்.

அதன்படி, ஜூலை 6 ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வுக்கான வினாத்தாள்களை டெலிகிராம் குழுக்களில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த குழுக்கள் மீது திருவனந்தபுரத்தில் உள்ள நகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விளம்பரம்

இந்த வழக்கு பொதுத் தேர்வுகள் (Prevention of Unfair Means) சட்டம் 2024-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தில் முதல் வழக்கு என்று செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

இதுபோன்ற மோசடிகளைக் கண்டறியும் முயற்சியின் ஒரு பகுதியாக, காவல்துறையின் சைபர் பிரிவு பல்வேறு டெலிகிராம் சேனல்கள் உட்பட சமூக ஊடக தளங்களில் 24×7 சைபர் ரோந்துப் பணியைத் தொடங்கியுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
cyber crime
,
kerala
,
kerala police

You may also like

© RajTamil Network – 2024