Tuesday, September 24, 2024

மருத்துவ படிப்பு: அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று நடக்கிறது

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

சென்னை,

தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, தரவரிசை பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. இதற்கிடையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில், மருத்துவப்படிப்பு சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. முதலாவதாக, சிறப்பு பிரிவு கலந்தாய்வு காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணி வரையில் நடைபெறுகிறது.

அதன்பிறகு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில், தரவரிசை பட்டியலில் முதல் 1,007 இடங்களை பிடித்த மாணவர்கள் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து மதியம் 2 மணி முதல் பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), எஸ்.சி., எஸ்.டி.சி., எஸ்.டி. பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

You may also like

© RajTamil Network – 2024