Wednesday, September 25, 2024

மல்லுவுட் பாலியல் குற்றச்சாட்டுகள்: பட்டியலில் தமிழ் நடிகர்கள்?

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

மலையாள சினிமா நடிகைகள் தமிழ் நடிகர்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமா என்றாலே இந்தியளவில் சிறந்த படங்களை உருவாக்கும் திரைத்துறை என்கிற பிம்பமே இருந்தது. குறைந்த முதலீட்டில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மீறிய திரைப்படங்களை உருவாக்கிக்கொண்டிருந்தனர்.

புயல் அடித்ததுபோல் 2018, மஞ்ஞுமல் பாய்ஸ், பிரேமலு, ஆவேஷம், ஆடுஜீவிதம் படங்கள் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலிக்க, மொத்த இந்திய சினிமாவும் மல்லுவுட்டை வியப்புடன் பார்த்தது.

ஹொம்பாலே பிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், லைகா, ஃபாண்டாம் ஸ்டூடியோ போன்ற பிரம்மாண்ட இந்திய சினிமாக்களை உருவாக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்கூட மலையாளத்தில் கடை திறந்துவிட்டார்கள்.

நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து மோகன்லால் ராஜிநாமா!

இனி சாதாரணமாக அங்கும் ரூ. 50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் படங்கள் உருவாகக் காத்திருக்கின்றன. இந்த நிலையில்தான், இன்னொரு சூறாவளி கிளம்பியிருக்கிறது. மலையாள சினிமாவில் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள், தொல்லைகள் என மலையாள சினிமாத்துறையினருடன் மொத்த கேரளமும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

கேரளத் திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையால், யாரெல்லாம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகளை அளித்தது? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.

pic.twitter.com/0d0pwfk0ZE

— Friday Matinee (@VRFridayMatinee) August 27, 2024

இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே, துணை நடிகைகளான ரேவதி சம்பத், ஸ்ரீலேகா, மினு முனீர் உள்ளிட்டோர் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேலா பாபு மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஒருவருடான இடவேலா பாபுவின் விடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!

இதில், நடிகர் சித்திக்கின் மேல் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை ரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்கத் (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜிநாமா செய்தனர். ஏன் செய்தனர்? பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அம்மா அமைப்பினர்தானாம். ’நடிகர் சங்கத்தில் பெண்கள் உறுப்பினராக வேண்டுமென்றாலே படுக்கைக்குதான் வரவேண்டும்’ என்றார் என நடிகர் முகேஷ் மீது குற்றச்சாட்டும் இருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க… இப்போது கத்தி தமிழ் நடிகர்கள் பக்கம் திரும்பியுள்ளது. தமிழில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்களே. பல துணை, முன்னணி நடிகைகளுக்கு தமிழ் சினிமாவே பெயரையும், புகழையும் அதைவிட சம்பாத்தியத்தையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

நடிகை ரேகா நாயர் கார் மோதியதில் ஒருவர் பலி!

ஆனால், இங்குள்ள திரையுலத்தின் ஆண்கள் அனைவரும் அன்பானவர்கள், பண்பானவர்கள் எனக் கூறிவிட முடியுமா? தமிழ் சினிமாவில் பாதிக்கப்பட்ட மலையாள நடிகைகள் யார்? இதுவரை நடிகர் ரியாஸ் கானைத் தவிர் வேறு எந்தப் பெயரும் கசியவில்லை. ஆனால், ஹேமா கமிட்டி அதிர்வு ஓய்வதற்குள் சில தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் முக்கியமாக நடிகர் தேர்வாளர்கள் (கேஸ்டிங் கோச் – casting coach) சிக்குவார்கள் என்றே தெரிகிறது.

அதேநேரம், தமிழ் சினிமாவிலுள்ள நடிகைகள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் தயக்கமில்லாமல் தங்களின் குரலை எழுப்பி, இங்குள்ளவர்களையும் விசாரணைக்குள் கொண்டு வரலாம் என்றும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

You may also like

© RajTamil Network – 2024