Saturday, September 21, 2024

மாணவர்களுக்கு ரூ.1,000-வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும்: முதல்-அமைச்சர்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது;- தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்த 43 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். வகுப்பறையை குழந்தைகளுக்கு பிடித்தபடி வண்ணமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவில் சவால் விடும் வகையில் வளர வேண்டும் என்பதே என் ஆசை. உங்களுக்கான திட்டங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.

மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல் முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நீட் போன்ற மோசடி தேர்வுகளை எதிர்க்கிறோம். அதற்கு ஒருநாள் முடிவு கட்டுவோம். நீட் தேர்வு மோசடி என முதன் முதலில் கூறியது தமிழ்நாடுதான். தற்போது இந்தியாவே அதை கூறுகிறது. கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல் சூழல் என எந்த தடையும் இருக்க கூடாது. மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000- வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும்" இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

© RajTamil Network – 2024