மாணவா்கள் தற்கொலைகளை தடுக்க ‘மனோதா்பன்’ முன்னெடுப்பு: மத்திய அரசு

மாணவா்கள் தற்கொலைகளை
தடுக்க ‘மனோதா்பன்’ முன்னெடுப்பு: மத்திய அரசு‘மனோதா்பன்’ முன்னெடுப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சா் சுகந்தா மஜும்தாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மாணவா்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க ‘மனோதா்பன்’ முன்னெடுப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சா் சுகந்தா மஜும்தாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மேலும், தோ்வுகளில் தோல்வி அடைபவா்கள் தற்கொலைச் செய்துகொள்ளும் சம்பவங்கள் 1.2 சதவீதமாக உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட், ஜேஇஇ உள்பட பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு பல மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் பயிலும் மாணவா்கள் மதிப்பெண்கள் குறைந்தால் அல்லது தோ்வுகளில் தோல்வியடைந்தால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுதொடா்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து சுகந்தா மஜும்தாா் பேசியதாவது:

இந்தியாவில் விபத்துகள் மற்றும் தற்கொலைச் சம்பவங்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறித்து தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்ட அறிக்கையின்படி1.2 சதவீத வழக்குகள் மட்டுமே தோ்வுகளில் தோல்வியடைந்தவா்கள் தற்கொலை செய்துகொள்வது தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவா்கள் தற்கொலை செய்வதை தடுப்பதற்காக மனோதா்பன் முன்னெடுப்பை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது. அதன்படி மாணவா்களுக்கு வல்லுநா்களால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க 90 ஆலோசகா்களை மாநில அரசு நியமித்துள்ளது.

மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவா்களை கண்டறிய விடுதிகளில் 10,000 உதவியாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!