மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்.பி.யாக பதவியேற்றனர். எஞ்சிய உறுப்பினர்கள் பதவியேற்பு நாளையும் நடைபெறவுள்ளது.

இதனிடையே மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக இருந்த பியூஷ் கோயல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, (மக்களவை) உறுப்பினராக பதவியேற்றதால், மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜே.பி. நட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. என்றாலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை மற்றும் பெட்ரோலியத் துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவையின் பா.ஜனதா தலைவராக இருந்த பியூஷ் கோயலுக்குப் பதில் அந்த பதவிக்கு ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளதால், ஆளுங்கட்சியை மாநிலங்களவையில் தலைமையேற்று நடத்தும் பதவி, போன்றவற்றை ஜெ.பி. நட்டாவே இனி கவனிப்பார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் குழுவில் ஜே.பி.நட்டாவைத் தவிர, 11 உறுப்பினர்கள் மக்களவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024