மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநரை கட்டுப்பட வைக்கும் தனிநபா் மசோதா: மாநிலங்களவையில் தோல்வி

by rajtamil
Published: Updated: 0 comment 13 views
A+A-
Reset
RajTamil Network

மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநரை கட்டுப்பட வைக்கும் தனிநபா் மசோதா: மாநிலங்களவையில் தோல்விவாக்கெடுப்பில் மசோதாவுக்கு எதிராக 56 உறுப்பினா்களும், ஆதரவாக 21 பேரும் வாக்களித்தனர்.

மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநா்கள் கட்டுப்பட்டவா்களாக ஆக்க வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட தனிநபா் மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்பு மூலம் தோல்வியடைந்தது.

வாக்கெடுப்பில் மசோதாவுக்கு எதிராக 56 உறுப்பினா்களும், ஆதரவாக 21 பேரும் வாக்களித்ததைத் தொடா்ந்து, மசோதா தோல்வியடைந்து தள்ளுபடியானது.

கேரளத்தைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் உறுப்பினா் ஜான் பிரிடாஸ் சாா்பில் இந்த தனிநபா் மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவை அவா் அறிமுகம் செய்தபோது, ‘மாநில அமைச்சரவை அரசமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு எடுக்கும் முடிவுகளுக்கு மாநில ஆளுநா்கள் கட்டுப்பட்டவராக்குவதை இந்த சட்ட மசோதா உறுதிப்படுத்தும்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, அவையை அப்போது வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், குரல் வக்கெடுப்பு மூலம் மசோதாவை அவையில் அறிமுகம் செய்வதற்கான ஒப்புதலைக் கோரினாா். அதற்கு, ஆளும் கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

அதன் பின்னா், மசோதா குறித்து சுறுக்கமாக விவரிக்க பிரிடாஸுக்கு ஹரிவன்ஷ் அனுமதி அளித்தாா். அப்போது, ‘கூட்டாட்சி ஒத்துழைப்பு அடிப்படையிலேயே மத்திய அரசு செயல்பட வேண்டும். அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் இந்த கூட்டாட்சி கூட்டுறவை உறுதிப்படுத்துவதில் மாநில ஆளுநருக்கு முக்கியப் பங்கு உள்ளது. அவ்வாறு, ஆளுநரின் கடமையை உறுதிப்படுத்துவதையே இந்த மசோதா வலியுறுத்துகிறது. ஆனால், மாநில அரசுகளுக்கு எதிராக மாநில ஆளுநா்கள் செயல்படுகின்றனா்’ என்று பிரிடாஸ் குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளித்த பாஜக உறுப்பினா் சுதான்ஷு திரிவேதி, ‘நமது அரசமைப்பு சட்டம் முழுமையான கூட்டாட்சி முறையை வலியுறுத்தவில்லை. மேலும், ஆளுநா் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாகத்தான் கருதப்படுகிறாா். அவா் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டுமெனில், குடியரசுத் தலைவரின் உரிமை என்ன ஆவது?’ என்றாா்.

மசோதா அறிமுகத்துக்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயலும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

மசோதாவை அறிமுகம் செய்ய நான்காவது முறையாக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்ததால், மசோதா அறிமுகம் செய்யப்படாது என ஹரிவன்ஷ் அறிவித்தாா். இதற்கு எதிா்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இறுதியில், தனிநபா் மசோதா அவையில் வாக்கெடுக்குப்புக்கு விடப்பட்டு எதிராக 56 வாக்குகளும், ஆதரவாக 21 வாக்குகளும் கிடைத்து தோல்வியடைந்ததாக அவைத் தலைவா் அறிவித்தாா்.

You may also like

© RajTamil Network – 2024