Saturday, September 21, 2024

‘மாயாஜால கண்ணாடி’ : இனி டிரைவிங் பண்ணுபோது தூங்கவே முடியாது…

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

‘மாயாஜால கண்ணாடி’ : இனி டிரைவிங் பண்ணுபோது தூங்கவே முடியாது… மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்புமாதிரி படம்

மாதிரி படம்

இந்த கண்ணாடியை அணிந்து தூங்கவே முடியாது. அதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், இல்லையா? ஆம், நீங்கள் கண்ணாடியை அணிந்து கண்களை மூடிக்கொண்டால் கண்ணாடியில் உள்ள சென்சார் அலாரத்தை ஒலிக்கச் செய்யும்.

நாகோன் மாவட்டத்தில் உள்ள மிசா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கௌஷிக் நியோகி மற்றும் ஷஷாங்க் தாஸ் ஆகியோர் இந்த சிறப்பு கண்ணாடிகளை கண்டுபிடித்துள்ளனர். மிசா மேல்நிலைப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர், வாகன ஓட்டுநர்களின் தூக்கத்தால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் புதுமையான சென்சார் கண்ணாடிகளை உருவாக்கியுள்ளனர். கண்ணாடிகளுக்கு ஒரு சிறப்பு சென்சார் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வகை கண்ணாடிகளை அணிந்து கொண்டு தூங்கும் போது, ​​கண்ணாடியில் இருந்து பீப் ஒலி எழுப்பும்.

விளம்பரம்

அதாவது கண்ணாடி அணிந்துக் கொண்டு வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகள் தங்களை அறியாமல் தூங்கும்போது, அந்த கண்ணாடி தூக்கத்தை கண்டறிந்த சரியான மூன்று வினாடிகளில் பீப் ஒலி மூலம் ஓட்டுநரை எழுப்பும். இரவில் வாகனம் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதால் உலகம் முழுவதும் பல விபத்துகள் நடக்கின்றன. மேலும் இதுபோன்ற பயங்கர விபத்துகளால் பலர் உயிரிழந்துள்ளனர். சென்சார்கள் கொண்ட இந்த பிரத்யேக கண்ணாடிகளை வாகனம் ஓட்டுபவர்கள் அணிந்தால், பெரும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் மாணவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இரவில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களின் வசதிக்காக இந்தக் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

இந்த கண்டுபிடிப்பு மிசா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து உற்சாகத்தையும், ஆதரவையும் பெற்றுள்ளது. கௌசிக் மற்றும் ஷஷாங்க் ஆகியோர் பல்வேறு பள்ளி நிகழ்வுகளில் தங்கள் கண்ணாடிகளை வெற்றிகரமாக காட்சிப்படுத்தியுள்ளனர், மேலும், சாலை பாதுகாப்பிற்கான அவர்களின் புதுமையான அணுகுமுறைக்காக அவர்கள் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 சூப்பர் விதைகள்.!
மேலும் செய்திகள்…

இந்த புதுமையான தூக்கக் கண்ணாடியை உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். எனது வீட்டிற்கு அருகில் ஒரு சோகமான விபத்து நிகழ்ந்தது, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து இந்த யோசனை எனக்கு வந்தது. மேலும், அந்த சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு, இந்த கண்ணாடியை உருவாக்க முடிவு செய்தேன்.

விளம்பரம்

இது குறித்து நான் கூகுள் மற்றும் யூடியூப்பில் விரிவான ஆராய்ச்சி செய்தேன், அதில் இதே போன்ற தயாரிப்புகள் அதிகமாக உள்ளன, ஆனால் பல சிக்கல்கலும் இருந்தன. முன்பு நங்கள் இந்த கண்ணாடியில் Arduino Nano ஐப் பயன்படுத்தினோம், ஆனால் அதன்பிறகு நாங்கள் Arduino Microக்கு மாறினோம், அது மிகவும் லைட் வெயிட்டாக உள்ளது. இந்த கண்ணாடி இப்போது செயல்பட்டாலும், அதற்கு இன்னும் பல மேம்பாடுகள் தேவைப்படுகிறது,” என்று மாணவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Accident
,
Local News

You may also like

© RajTamil Network – 2024