மாரி செல்வராஜின் வாழை!

மாரி செல்வராஜின் வாழை!இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “வாழை’.

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'வாழை'. இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் முதல் சிங்கிளான "தென்கிழக்கு தேன் சிட்டு' பாடல் வெளியாகியிருக்கிறது. யுகபாரதியின் வரிகளில் தீ குரலில் மெல்லிசைப் பாடலாக உருவாகியிருக்கிறது இப்பாடல்.

இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராம், பா.இரஞ்சித், "கூழாங்கல்' இயக்குநர் வினோத்ராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.விழாவில் பேசிய இயக்குநர் ராம், முதன் முதலில் "தங்க மீன்கள்' படத்துக்கு லொகேஷன் தேடி நாகர்கோவிலில் இருக்கிற எல்லா மலைகளிலும் ஏறி இறங்கினோம். மாரியுடன் மலை ஏறுவது ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். பள்ளத்தாக்கு அளவுக்குக் கதை இருக்கும்.அதே மாதிரி "தங்க மீன்கள்' படப்பிடிப்புக்காக வயநாடுல இருக்கக்கூடிய ஒரு மலைப் பகுதியில ஷூட்டிங் நடத்தினோம். அந்த நேரத்துல எங்களுக்குச் சாப்பாடு வரலை. நான் கீழ இறங்கி பார்க்கப்போனேன். அப்போ என்னோட துணையாக மாரி செல்வராஜ் வந்தான்.

அவன் கருப்பியை கூட்டிட்டு அச்சன்கோவில் மலையில ஏறினதுல இருந்து மலை மேல ஏறிட்டே இருக்கான். அங்கிருக்கிற மலை முகடுகள்ல கொடியை நட்டுக்கிட்டே இருக்கான். மலையிலிருந்து மாரி செல்வராஜ் தன்னுடைய கருத்தை, அரசியலைப் பேசிக் கொண்டேதான் இருப்பான். அதை நாம் கேட்டுதான் ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம்'' என்றார்.

Related posts

குஜராத்: தமிழக பக்தர்கள் 55 பேருடன் சென்ற சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது

வெள்ளத்தில் மூழ்கிய கார்: 2 மணி நேரம் சிக்கி தவித்த தம்பதி – வைரல் வீடியோ

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு