2
புதுதில்லி: மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 18 சதவிகிதம் சரிவடைந்து ரூ.3,102 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா கடந்த நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.3,786 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதையும் படிக்க: வங்கி பங்குகள் உயர்வை தொடர்ந்து மீண்டும் மீண்ட இந்திய பங்குச் சந்தை!
செயல்பாடுகளின் மொத்த வருவாய் இரண்டாவது காலாண்டில் ரூ.37,449 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.37,339 கோடியாக இருந்தது.
இந்த நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 5.88 சதவிகிதம் குறைந்து ரூ.10,807.50 ஆக வர்த்தகமானது.