Tuesday, October 1, 2024

மாருதி சுஸுகி விற்பனை 2 சதவிகிதம் அதிகரிப்பு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

புதுதில்லி: மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன விற்பனையானது செப்டம்பரில் 2 சதவிகிதம் அதிகரித்து 1,84,727 யூனிட்டுகளாக உள்ளது.

இதுகுறித்து மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,81,343 வாகனங்களை விற்பனை செய்ததோம். இதில் உள்ளூர் வாகன விற்பனையானது 1,50,812 என்ற எண்ணிக்கையிலிருந்து 4 சதவிகிதம் குறைந்து 1,44,962-ஆக உள்ளது.

ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட மினி பிரிவு கார்களின் விற்பனை 2023 செப்டம்பரில் 10,351 யூனிட்களிலிருந்து 10,363 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

ஐடி பங்குகளுக்கு அமோக வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!

பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன் – ஆர் உள்ளிட்ட காம்பேக்ட் கார்களின் விற்பனை 68,551 என்ற எண்ணிக்கையிலிருந்து 60,480 ஆக குறைந்துள்ளது.

பிரெஸ்ஸா, எர்டிகா, கிராண்ட் விட்டாரா மற்றும் எக்ஸ்எல் 6 உள்ளிட்ட பயன்பாட்டு வாகனங்கள் கடந்த மாதம் 61,549 விற்பனையாகி, முந்தைய 59,272 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், இது 4 சதவிகிதம் வளர்ச்சியாகும்.

மாருதி ஈகோ விற்பனையானது 2023 செப்டம்பரில் 11,147 யூனிட்டுகளிலிருந்து கடந்த மாதம் 11,908 யூனிட்களாக இருந்தது. அதே நேரத்தில் இலகு ரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி முந்தைய 2,294 யூனிட்டுகளிலிருந்து 3,099 யூனிட்களாக உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 22,511 யூனிட்களாக இருந்த ஏற்றுமதி, கடந்த மாதம் 27,728 யூனிட்களாக உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024