மிசோரமில் 33,000 -க்கும் மேற்பட்ட பன்றிகள் அழிப்பு… காரணம் என்ன?

by rajtamil
Published: Updated: 0 comment 6 views
A+A-
Reset

மிசோரம் மாநிலத்தில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த 7 மாதங்களில் இதுவரை 33,000 -க்கும் மேற்பட்ட பன்றிகள் அழிக்கப்பட்டதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிசோரம் மாநிலத்தில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் (ஏஎஸ்எஃப்) வேகமாகப் பரவி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக மிசோரம் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் இறப்புகள் மற்றும் பன்றிகள் அழிப்பு கடந்த சில வாரங்களாகக் குறைந்துள்ள போதிலும் பல மாவட்டங்களில் தொற்று பாதிப்புகள் குறையவில்லை என கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி முதல் பன்றிக் காய்ச்சல் தொற்று பரவி வருவதால் மிசோரமில் உள்ள 11 மாவட்டங்களில் 6 மாவட்டங்களிலுள்ள பன்றிகள் வளர்க்கும் விவசாயிகள் ரூ. 25 கோடி வரை இழப்பீடுகளைச் சந்தித்து உள்ளதாக அதிகாரப்பூர்வமற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்களைப் பாதிக்காத இந்தத் தொற்று பன்றிகளிடையே மிக அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

கொல்கத்தாவில் இனிப்பகத்தில் 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு தயாரிப்பு

சுகாதாரத்துறை கூற்றுப்படி ஐசவால், சம்பய், லுங்லெய், சைதுவால், காவ்சால் மற்றும் செர்சிப் மாவட்டங்களின் 180 கிராமங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு பண்ணைகள், வீடுகளில் வளர்க்கப்படும் பன்றிகள் தீவிர தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

மிசோரம் எல்லைப்பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பன்றிக் காய்ச்சல் தொற்று முதன்முதலில் பதிவானது. இதனால், 2021-ல் 33,420 பன்றிகளும், 2022-ல் 12,800 பன்றிகளும், 2023-ல் 1,040 பன்றிகளும் கொல்லப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காசநோய்க்கான புதிய குறுகியகால சிகிச்சை முறை: மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல்

தொற்றுப் பரவலுக்குப் பிறகு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சுகாதாரத் துறை மிசோரமின் 11 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் மற்றும் பகுதிகளை, தொற்றுநோய்கள் மற்றும் பரவக்கூடிய நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் தொற்றுநோய்கள் மண்டலங்களாக அறிவித்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பன்றிகள், பன்றிக் இறைச்சி வழங்குவதை சுகாதாரத் துறை தடை செய்துள்ளது.

மேலும், அண்டை மாநிலங்கள் மற்றும் நாடுகளில் அடிக்கடி பன்றிக் காய்ச்சல் தொற்று பதிவாகும் பகுதிகளில் இருந்து பன்றிகள் மற்றும் பன்றிக்குட்டிகளை இறக்குமதி செய்வதையும் மிசோரம் அரசு தடை செய்துள்ளது.

பெரும்பாலும் பன்றிக் காய்ச்சல் பரவல் காலநிலை மாற்றத்தால் பருவமழை மழை தொடங்கும் போது ஏற்படுகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நோயால் பன்றிகளை இழந்த ஏராளமான குடும்பங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கியுள்ளது.

ரஷிய அதிபர் புதினுக்கு ரகசியமாக இரு மகன்கள்: வெளியானது மறைக்கப்பட்ட ஆடம்பர வாழ்க்கை!

மியான்மர், வங்கதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பன்றிகள் அல்லது பன்றி இறைச்சி காரணமாக பன்றிக் காய்ச்சல் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மிசோரம் மியான்மாருடன் 510 கி.மீ நீளமான வேலியில்லாத எல்லையையும், வங்கதேசத்துடன் 318 கி.மீ எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது.

வடகிழக்கு பகுதியில் பழங்குடியினர் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பிரபலமான உணவாக பன்றி இறைச்சி இருக்கின்றது.

ஆண்டுதோறும் சுமார் ரூ. 8,000-10,000 கோடி மதிப்பில் பன்றி இறைச்சி வியாபாரம் இங்கு உள்ளது. மொத்தமாக, அசாம் மாநிலம் மிகப்பெரிய அளவில் பன்றி இறைச்சி ஏற்றுமதி செய்து வருகின்றது.

You may also like

© RajTamil Network – 2024