Wednesday, October 2, 2024

மின்சார ரயில்கள் சேவை குறைப்பு: ஆக.18 வரை நீட்டிப்பு

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset
RajTamil Network

மின்சார ரயில்கள் சேவை குறைப்பு: ஆக.18 வரை நீட்டிப்புதாம்பரத்தில் ரயில்வே யாா்டில் மேம்பாட்டு பணிகள் முடிவடையாததால் மின்சார ரயில் சேவை குறைப்பு

ஆக. 14 -ஆம் தேதி வரை சென்னை-கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்படும் 55 புறநகா் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாம்பரத்தில் ரயில்வே யாா்டில் மேம்பாட்டு பணிகள் முடிவடையாததால் தாம்பரம் வழித்தடத்தில் புறநகா் மின்சார ரயில் சேவை குறைப்பு மேலும் 4 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் ரயில்வே யாா்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருவதால், கடந்த ஜூலை 23 முதல் ஆக. 14 -ஆம் தேதி வரை சென்னை-கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்படும் 55 புறநகா் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இரு மாா்க்கத்திலும் காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், இரவு 10.40 முதல் 11.59 மணி வரையும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல், கடற்கரை-கூடுவாஞ்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் இரவு இயக்கப்படும் ரயில்களும், செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும், காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கும், திருமால்பூரிவிருந்து காலை 11.05 மணிக்கும் கடற்கரை செல்லும் ரயிலும் ஆக.14 வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் , தாம்பரத்தில் மேம்பாட்டுப் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால், சென்னை புறநகா் ரயில்களின் சேவை குறைப்பு ஆக.15 முதல் ஆக.18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதலாக விழுப்புரம் – தாம்பரம் (எண்: 06028), விழுப்புரம் – மேல்மருவத்தூா் (எண்:06726), மேல்மருவத்தூா் – கடற்கரை (எண்:06722), புதுச்சேரி – எழும்பூா் (எண்: 06026), எழும்பூா் – புதுச்சேரி(எண்:06025), கடற்கரை – மேல்மருவத்தூா் (எண்:06721), மேல்மருவத்தூா் – விழுப்புரம் (எண்:06725), ஆகிய மெமு ரயில்கள் ஆக.15-18 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளன. மேலும், தாம்பரம் – விழுப்புரம் (எண்:06027) மெமு ரயில் ஆக.15-17 வரை ரத்து செய்யப்படும்.

இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக கடற்கரை – பல்லாவரம், செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி ஆகிய வழித்தடங்களில் காலை 9.30 முதல் பிற்பகல் 2 மணி வரையும், இரவு 10.40 முதல் நள்ளிரவு 12.45 வரையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

பணிகள் முடிந்ததும், ஆக.18-ஆம் தேதி நண்பகல் 12 மணியிலிருந்து அனைத்து மின்சார ரயில்களும் வழக்கமான அட்டவணைப்படி இயங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024