மிஸ்பண்ணிடாதீங்க… ரயில்வேயில் 8,113 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,113 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அரசுப் பணிக்கான அறிவிப்புக்காக காத்திருக்கும் தகுதியான பட்டதாரிகள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 8,113

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Chief Commercial cum Ticket Supervisor

காலியிடங்கள்: 1,736

பணி: Station Master

காலியிடங்கள்: 994

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Goods Train Manager

காலியிடங்கள்: 3,144

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,200

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Account Assistant cum Typist

காலியிடங்கள்: 1,507

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,200

பணி: Senior Clerk cum Typist

காலியிடங்கள்: 732

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,200

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தமிழக அரசில் 51 உதவி வழக்குரைஞர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், தட்டச்சு திறன், கணினியில் புணிப்புரியும் திறன், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் அமைந்திருக்கும்.

எழுத்துத் தேர்வு தேதி, இடம் குறித்த தகவல்கள் இ-அட்மிட் கார்டு மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரயில்வே விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகை மற்றும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? 1,497 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வுக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.500, இதர அனைத்து பிரிவினருக்கும் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.10.2024

மேலும் விவரங்கள் அறிய www.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் அல்லது இங்கே கிளிக்செய்து பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Related posts

Pakistan: 7 Labourers From Multan Killed In Terrorist Attack In Balochistan’s Panjgur

Kerala Launches New Entrance Training Programme Benefiting Over 8 Lakh Students

AI Express-AIX Connect Merger In October First Week; ‘I5’ To Fly Into Sunset