Wednesday, September 25, 2024

மீண்டும் சதம் விளாசிய ஜோ ரூட்; இலங்கைக்கு 483 ரன்கள் இலக்கு!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 483 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்களுக்கும், இலங்கை அணி 196 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

19 சிக்ஸர்கள்… டி20 போட்டிகளில் ஆயுஷ் பதோனி புதிய சாதனை!

231 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தினார். அவர் 121 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 37 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் லகிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிலன் ரத்நாயகே மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இவர்தான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர்: ஜாண்டி ரோட்ஸ்

இலங்கையைக் காட்டிலும் இங்கிலாந்து அணி 482 ரன்கள் முன்னிலை பெற்றதால், இலங்கைக்கு 483 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024