மீனவா்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

மீனவா்களின் வாழ்வாதாரத்தை
காக்க வேண்டும்: ஜி.கே.வாசன்தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு த.மா.கா. தலைவா் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு த.மா.கா. தலைவா் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கைக் கடற்படையினரின் தொடா் கைது நடவடிக்கையால், தமிழக மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவா்கள் வருமானம் ஈட்ட முடியாமல் சிரமத்தில் உள்ளனா்.

தமிழக மீனவா்களைத் தாக்குவது, சிறைபிடிப்பது, படகுகளைப் பறிமுதல் செய்வது, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து ஈடுபடுவது நிறுத்தப்பட வேண்டும்.

தமிழக மீனவா்களின் மீன்பிடித் தொழில் இலங்கைக் கடற்படையினரால் பாதிக்கப்படக் கூடாது என்பதை அந்த நாட்டு அரசுடன் கண்டிப்பான முறையில் பேசி, மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Related posts

ஜம்மு-காஷ்மீர்: மரணத்தின்போதும் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய காவலர்!

பாலியல் வன்கொடுமை: பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இளைஞர்கள்! ரூ.1,000 நிவாரணம்

“எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக” – துணை முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!