முடிவுக்கு வந்தது மருத்துவர்கள் போராட்டம்!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் : முடிவுக்கு வந்தது மருத்துவர்கள் போராட்டம்!மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற அறிவுரையை தொடர்ந்து மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

கொல்கத்தாவில் உள்ள பழமையான கே.ஜி.கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் அந்த வளாகத்திலேயே வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற அறிவுரையை தொடர்ந்து மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

விளம்பரம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு குறித்த திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த வழக்கை அரசியலாக்கினால் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read:
“இதை மட்டும் மறந்துடாதே…” – தவெக தலைவர் விஜய்க்கு அம்மா ஷோபா சொன்ன அட்வைஸ்

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ மற்றும் கொல்கத்தா காவல்துறை தாக்கல் செய்த வழக்கின் நிலை அறிக்கைகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அப்போது, இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ள நேர விவரங்களில் ஏன் இவ்வளவு முரண்பாடுகள் உள்ளன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உயிரிழந்த பெண்ணின் தந்தையின் அனுமதி இல்லாததால் தான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது எனவும் கொல்கத்தா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

இதையடுத்து, மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர பிரத்யேக இணையதளத்தை தொடங்க மத்திய சுகாதாரத்துறைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, மருத்துவர் கொலையை அரசியலாக்கக்கூடாது எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kolkata
,
Kolkata Doctor Murder Rape
,
sexual abuse

You may also like

© RajTamil Network – 2024