Saturday, September 28, 2024

முதன்முறை பணிக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகை…

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

முதன்முறை பணிக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகை… பட்ஜெட்டில் அறிவிப்புநிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

முதன் முறை பணிக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் முதன்மையான நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படும் என்றும் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டு முழு பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட 9 துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.

விளம்பரம்

அதன்படி, 3 திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க இருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அதில், முதன் முறையாக பணிக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 கோடியே 10 லட்சம் இளைஞர்கள் பயன் அடைவார்கள் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதே போன்று உற்பத்தி துறையில் புதிதாக பணிக்கு சேருவோருக்கு 4 ஆண்டுகளுக்கு, வருங்கால வைப்பு நிதியில் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும், மாத ஊதியம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் புதிதாக ஊழியர்களை சேர்க்கும் நிறுவனங்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் சலுகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

விளம்பரம்

அதாவது, புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்கும் வைப்பு நிதியை 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வியை பொறுத்தவரை, உள்நாட்டில் உயர்கல்வி கற்பதற்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 500 முதன்மையான நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு 1 கோடி இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

விளம்பரம்இதையும் படிங்க: கோயில் விவசாய நிலங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன..? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி!

12 மாதங்கள் வழங்கப்படும் இப்பயிற்சிக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயும், ஒரு முறை 6 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒட்டுமொத்தமாக ஓராண்டு பயிற்சிக்கு 66 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
FINANCE MINISTER NIRMALA SITHARAMAN
,
PM Modi

You may also like

© RajTamil Network – 2024