முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

ஆளுநர் மீது அவதூறு – முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவுமுதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஆனந்த் போஸ்

முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஆனந்த் போஸ்

அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட ஆளுநர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் குறித்து அவதூறு கருத்து தெரிவிப்பதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கொல்கத்தா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்கு பெண்கள் அஞ்சுவதாக கூறியிருந்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் Side Dish மட்டுமல்ல, மதுபானமே இனி வீட்டுக்கு வரும்!

இதையடுத்து மம்தா பானர்ஜி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆனந்த போஸ் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணாராவ், அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட ஆளுநர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

இவ்வாறு அவதூறு பேசுவதற்கு தடை விதிக்காவிட்டால், வழக்கு தொடர்ந்தவருக்கு எதிராக மீண்டும் அவதூறு வெளியிடுவதற்கு வழி வகுக்கும் என குறிப்பிட்ட நீதிபதி, ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் குறித்து அவதூறு கருத்து தெரிவிப்பதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
governor
,
kolkata
,
mamta banerjee

You may also like

© RajTamil Network – 2024