Saturday, September 21, 2024

முதலில் முட்டை வந்ததா? கோழி வந்ததா? வாக்குவாதத்தில் நண்பனை கொலை செய்த தொழிலாளி

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

நண்பரிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் கதிர் மார்க்ஸ் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார்.

ஜகார்த்தா,

இந்தோனேசியா நாட்டில் 'கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா' என்று புதிரின் விவாதத்தில் நண்பரை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 24 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று கைது செய்யப்பட்ட தொழிலாளி, தனது நண்பர் கதிர் மார்கஸை (வயது 47) மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தனர். 'கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா' என்று மார்கஸிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவாதம் வாக்குவாதமாக மாறிய பிறகு கதிர் மார்கஸ் விவாதம் செய்ய விரும்பாமல் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதனால் கோபமடைந்த அவரது நண்பர் ஆத்திரத்தில் மார்க்ஸை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

மார்கஸ் உடல் கடந்த 26-ம் தேதி அன்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்தோனேசியா நாட்டில் வாட்சப் குழுவிலிருந்து நீக்கியதற்காக நண்பரை ஒருவர் கத்தியால் குத்திகொன்ற சம்பவம் கடந்தாண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அற்ப காரணங்களுக்காக கொலை செய்வது இந்தேனோசியா நாட்டில் அதிகரித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024