முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இபிஎஸ்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாற்றுத்திறனாளிகள் பற்றி மகாவிஷ்ணு கூறிய கருத்துகள் தவறானது. மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படும் வகையில் பேசியது கடும் கண்டனத்திற்குரியது. மாற்றுத்திறனாளிகளை மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும். சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மகாவிஷ்ணு திமுக அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

நாமக்கல் அரசுப் பள்ளி சுவரில் மனிதக் கழிவை சமூகவிரோதிகள் பூசியிருக்கிறார்கள். இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே வேங்கைவயல் சம்பவத்தில் இன்னும் அரசால் தீர்வு காண முடியவில்லை. திமுக ஆட்சியல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பயமில்லாமல் ஈடுபடுகிறார்கள்.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராயின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் துபை சென்றார். என்ன முதலீடு கொண்டு வந்தார் என்று இதுவரை தெரியவில்லை. பிறகு ஜப்பான், சிங்கப்பூர் சென்றார். அடுத்து ஸ்பெயின் சென்றார். தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.

எவ்வளவு கோடி முதலீடுகள் செய்யப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்கள் தெரிந்துகொள்வதற்காக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த தொழிற்சாலைகளுடன் தான் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதற்கு வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

தமிழ்நாட்டிலேயே ஒப்பந்தம் போட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024