முதல்வர் அதிஷியுடன் தில்லி சாலைகளை ஆய்வு செய்த கேஜரிவால்!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

பாஜகவால் தடைப்பட்டுள்ள மக்கள் நலப் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்படும், நகரில் சேதமடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும் என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரித்துள்ளார்.

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள அதிஷியுடன், கேஜரிவால் நகரில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக கேஜரிவால் கூறியது,

மக்களுக்கான பணிகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் தில்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதே பாஜகவின் இலக்காக இருந்ததால், தான் சிறைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

இதையும் படிக்க:அமெரிக்காவில் இந்து கோயில் மீது தாக்குதல்: 10 நாள்களில் 2வது முறை!

நான் சிறையிலிருந்து திரும்ப வந்துவிட்டேன், நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தில்லி மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். மக்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும்.

சிறையிலிருந்தபோதும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், தற்போது 24 மணி நேரமும் தீவிரமாக மக்கள் பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.

தில்லி பல்கலைக்கழக பகுதியில் உள்ள சாலையை ஆய்வு செய்தபோது ஆம் ஆத்மி கடசியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்எல்ஏ திலீப் பாண்டே உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதையும் படிக்க: வேட்டையன் டிரைலர் எப்போது?

தில்லியில் வேலைகளை நிறுத்துவதன் மூலம் ஆம் ஆத்மி அரசாங்கத்தை அவதூறு செய்வதே அவர்களின் நோக்கம், ஆம் ஆத்மியும் அதன் அரசாங்கமும் மக்கள் பணிகளை நிறுத்த அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

கலால் கொள்கை வழக்கில் 5 மாதங்கள் திகார் சிறையிலிருந்த கேஜரிவால், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற நிலையில், இந்த மாத தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த வாரம் தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகிய அவர், பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லி மக்களிடம் இருந்து நேர்மைக்கான சான்றிதழைப் பெற்ற பிறகு மீண்டும் பதவிக்கு வருவேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024