Friday, September 20, 2024

முதல் டி20 போட்டி; ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

சவுத்தம்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி சவுத்தம்டனில் இன்று நடக்கிறது.

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், ஸ்டோய்னிஸ், இங்லிஷ், ஹேசில்வுட், சீன் அப்போட், ஆடம் ஜம்பா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் கேப்டன் பட்லர் காயத்தால் விலகி இருப்பதால் பில் சால்ட் அணியை வழிநடத்துகிறார். இளம் வீரர்களை கொண்டுள்ள இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல், விக்கெட் கீப்பர் ஜோர்டான் காக்ஸ் அறிமுக வீரர்களாக களம் இறங்குகிறார்கள்.

இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 11-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024