Tuesday, September 24, 2024

முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் வங்கதேசம்!

by rajtamil
Published: Updated: 0 comment 17 views
A+A-
Reset

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 94 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, துணைக் கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்கள் எடுத்தார்.

2-வது டெஸ்ட்டில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டால்… என்ன சொல்கிறார் ஸ்டுவர்ட் பிராட்?

வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹாசன் மஹ்முத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்திருந்தது. முஸ்பிகூர் ரஹீம் 55 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தானைக் காட்டிலும் 132 ரன்கள் பின் தங்கிய நிலையில், வங்கதேச அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. சிறப்பாக விளையாடிய முஸ்பிகூர் ரஹீம் 9 ரன்களில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். அவர் 191 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மறுமுனையில் அவருக்கு உறுதுணையாக விளையாடிய மெஹிதி ஹாசன் மிராஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் 565 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், பாகிஸ்தானைக் காட்டிலும் வங்கதேசம் 117 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்!

இதனையடுத்து, பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து 23 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேசத்தைக் காட்டிலும் பாகிஸ்தான் 94 ரன்கள் பின் தங்கியுள்ளது. அப்துல்லா ஷஃபீக் 12 ரன்களுடனும், ஷான் மசூத் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024