Saturday, September 21, 2024

முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்றும் நாளையும் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இம்மாநாட்டு வளாகத்தில் வேல் அரங்கம், அருள்தரும் அறுபடை முருகனின் மூலவர் காட்சிகள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, ஆய்வரங்கங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லோருக்கும் எல்லாம் என்ற நமது திராவிட மாடல் அரசில், நாள்தோறும் அறப்பணிகளால் ஆன்மீகப் பெரியோர்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற நமது #DravidianModel அரசில், நாள்தோறும் அறப்பணிகளால் ஆன்மீகப் பெரியோர்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் @tnhrcedept சார்பில் நடைபெறும் #அனைத்துலக_முத்தமிழ்_முருகன்_மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் @PKSekarbabupic.twitter.com/V1TQDOBVdb

— M.K.Stalin (@mkstalin) August 24, 2024

You may also like

© RajTamil Network – 2024