முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது இந்த நிலையில் , பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியவரும், தேசியத்தை தனது உடலாகவும், தெய்வீகத்தை தன் உயிராகவும் போற்றிய மாபெரும் தலைவர் தென்னகத்து நேதாஜி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இன்று.
உண்மை, உழைப்பு, தன்னலமற்ற மக்கள் பணிக்கு அடையாளமாக திகழ்ந்து தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்த பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம். என தெரிவித்துள்ளார்.