முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.50,000 – சிக்கிம் முதல்-மந்திரி அறிவிப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

கேங்க்டாக்,

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இனி குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.50,000 வழங்கப்படும் என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற சிக்கிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின்(FLFS) 22-வது ஆண்டு விழாவில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இதன்படி, ஒரு முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் இனி ரூ.22,000-ல் இருந்து, ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதே போல், இரண்டு முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இனி மாத ஓய்வூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.55,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பிரேம் சிங் தமாங் கூறினார்.

அதோடு, சிக்கிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்புக்கு சிக்கிம் அரசு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் மானியமாக வழங்கும் என்றும் பிரேம் சிங் தமாங் அறிவித்தார். இந்த நிதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், அவர்களின் ஆதரவு அமைப்பை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024