மும்பையை மூழ்கடிக்கும் மழை! வானிலை மையம் சொன்ன நல்ல தகவல்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

மும்பை: மும்பை மாநகரில், நேற்று முதல் பெய்த கனமழை காரணமாக, அங்கு தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துகொண்டிருப்பதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையல், இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு நல்ல தகவலை வெளியிட்டிருக்கிறது.

அதாவது, மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் பருவமழையானது மெல்ல விலகும் என்று அறிவித்துள்ளது.

புதன்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, புணே உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. மும்பையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த பெண் பலியானார்.

இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மும்பை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி சுனில் காம்ளே, இந்த பருவமழைக் காலத்தில் மகாராஷ்டிரத்துக்கு 2900 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரியைக் காட்டிலும் 600 மி.மீ. மழை அதிகமாகும்.

இன்னும் 5 – 6 நாள்களில், பருவமழை படிப்படியாகக் குறைந்து, அக்டோபர் 5ஆம் தேதி முற்றிலும் விடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது, ஒருவேளை, தாமதமானால், அக்டோபர் 10ம் தேதி பருவமழை விடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

மும்பையில் நேற்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, நேற்று ஒரே நாளில் 200 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இன்றும் மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

You may also like

© RajTamil Network – 2024