முரசொலி செல்வம் உடல் தகனம்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் பெங்களூருவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 84.

அவரது உடல் பெங்களூருவில் இருந்து நேற்று பிற்பகல் சென்னை கொண்டு வரப்பட்டது. கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்ட முரசொலி செல்வம் உடலைக் கண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இன்று அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து இன்று மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின்மயானம் வந்தடைந்தது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024