Saturday, September 21, 2024

முருகன் மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்: அமைச்சர் சேகர் பாபு

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

முத்தமிழ் முருகன் மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பழனியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி அடைந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நேற்று மட்டும் சுமார் 600 கலைஞர்கள் இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 25,000 பேர் பங்கேற்பார்கள் என நினைத்தோம் ஆனால் லட்சக்கணக்கான மக்கள் தமிழ்நாடு அரசின் முருகன் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்… சொல்லப் போனால்

பழனியை சுற்றிலும் அரோகரா கோஷம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் இந்த மாநாட்டை ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரிகிறது. பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் நேற்று ஒரு நாள் மட்டும் 1.15 லட்சம் மக்கள் உணவு அருந்தினார்கள். ஆதீனங்கள், நீதியரசர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் முக்கிய பிரமுகர்கள் 2ம் நாள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ அரசியல் சார்பற்ற, தமிழ்நாடு அரசு எடுக்கும் விழா என்பதோடு இந்து சமய அறநிலையத்துறையும் சேர்ந்து எடுக்கும் விழா என்பதால் இந்த துறைக்கு அந்த கடமை இருக்கிறது என்பதால் தமிழ்நாடு அரசு இந்த விழாவை எடுத்துக் கொண்டுள்ளோம் என்றார். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 2 நாள்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நிகழ்வாக காலை 8.25 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா். காலை 8.45 மணிக்கு மாநாட்டுக் கொடியை ரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றினாா்.

இதைத்தொடா்ந்து, காலை 8.50 மணிக்கு முருகப் பெருமானின் சிறப்புகளை விளக்கும் வகையில், திருக்கயிலாய மலை தோற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிக் கூடத்தை அமைச்சா்கள் இ. பெரியசாமி, பி.கே. சேகா்பாபு, அர. சக்கரபாணி ஆகியோா் திறந்துவைத்தனா். முப்பரிமாண காட்சி, மெய்நிகா் காட்சி அரங்குகளையும் திறந்துவைத்து அவா்கள் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, அருணகிரிநாதா் அரங்கில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிகளை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

You may also like

© RajTamil Network – 2024