முஷீர் கானின் வலுவான மனநிலை இந்திய அணிக்கு உதவும்!

by rajtamil
Published: Updated: 0 comment 6 views
A+A-
Reset

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை (செப்.5) முதல் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்தியா பி அணியில் முஷீர்கான் விளையாடுகிறார். இவர் சர்ஃபராஸ் கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் 94/7 விக்கெட் இழந்த நிலையில் தனது அபாரமான பேட்டிங்கினால் 181 ரன்கள் அடித்து 321 ரன்களுக்கு வித்திட்டார்.

இந்திய பி அணி 143 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. சர்பராஸ், ரிஷப் பந்த் விளையாடி வருகிறார்கள்.

900 கோல்கள்..! வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ!

தம்பியின் சதத்தை கொண்டாடிய சர்ஃபராஸ் கான்

முதல் இன்னிங்ஸில் முஷீர் கான் சதம் அடித்தபோது அவரைவிடவும் சர்ஃபராஸ் கான் மிகுந்த ஆர்வமாக அந்தச் சதத்தைக் கொண்டாடினார்.

இந்த விடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றன.

உள்ளூர் கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் கான் அசத்தலாக விளையாடியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் அவரது சகோதரரும் சிறப்பாக விளையாடுவது கூடுதல் பலமாக பார்க்கிறார்.

Musheer Khan brings up his
A special celebration and a special appreciation from brother Sarfaraz Khan #DuleepTrophy | pic.twitter.com/wbeDVIQQ2B

— Hypocrisy (@aatrva15422) September 7, 2024

தேசிய மல்யுத்தப் போட்டி:
பரமக்குடி பள்ளி மாணவா்கள் சாதனை

இந்தியாவுக்கு ஏற்ற வீரராக முஷீர்கான் இருப்பார்

முஷீர்கான் குறித்து முன்னாள் இந்திய அணியின் விக்கெட் கீப்பட் விஜய் தாஹியா கூறியதாவது:

மற்ற வீரர்களை விடவும் முஷீர்கான் வித்தியாசமானவர். அவருக்கு திடமான மனநிலை இருக்கிறது. என்னால் வருங்காலத்தை கணிக்க முடியாது. ஆனால், அவர் இதேமாதிரி தொடர்சியாக ரன்கள் குவித்தால் இந்திய அணிக்கு சிறந்த வீரராக இருப்பார்.

கடந்த சீசனில் பேட்டிங்கை எங்குவிட்டாரோ அங்கிருந்தே தொடங்கியுள்ளார். ரஞ்சி கோப்பையின் அரையிறுதி, இறுதிப் போட்டியிலும் அசத்தலாக விளையாடிய முஷீர்கான் துலீப் கோப்பையின் முதல் போட்டியிலும் சதம் அடித்துள்ளார்.

முஷீர் தொடக்கத்தில் இடது கை சுழல்பந்து வீச்சாளராகவே தொடங்கினார். அவரது பேட்டிங் மாற்றம் அசாத்தியமானது. ஒன்றுக்காக கடினமாக உழைத்தால் அது நிச்சயமாக உங்களைச் சேரும் என்றார்.

You may also like

© RajTamil Network – 2024