Monday, September 23, 2024

மூக்கு வழியாக ஏறி மூளையை தின்னும் அமீபா.. எச்சரிக்கும் மருத்துவர்கள்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

மூளையை உண்ணும் அமீபா… எச்சரிக்கும் மருத்துவர்கள்… கேரளாவில் வேகமாக பரவி வரும் மூளை நோய்…!மூளையை  உண்ணும் அமீபா... எச்சரிக்கும் மருத்துவர்கள்... கேரளாவில் வேகமாக பரவி வரும் மூளை நோய்...!

தேங்கியிருக்கும் மாசுபட்ட தண்ணீரில் குளிப்பதை பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகளும் தவிர்க்க வேண்டும் என அமீபா நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மூளையை உண்ணும் அமீபா நோயால் கேரளாவில் மூன்றாவது மரணம் ஏற்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற அரிய வகை மூளை நோய் கேரளாவில் பரவி வருகிறது.

அசுத்துமான நீரில் குளிக்கும் போது அதில் உள்ள அமீபா தொற்று, மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை தாக்கும் எனவும்,இது கொரோனா வைரஸ் போல ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

இந்த நோய் குழந்தைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில்,அமீபா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

தேங்கியிருக்கும் மாசுபட்ட தண்ணீரில் குளிப்பதை பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகளும் தவிர்க்க வேண்டும் எனவும்,குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் சுத்தமாக இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

nw_webstory_embed
மேலும் செய்திகள்…

நீச்சல் குளங்களை போதுமான அளவு குளோரின் செலுத்தி பராமரிக்க வேண்டும் எனவும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Brain Health
,
kerala

You may also like

© RajTamil Network – 2024