மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள மருத்துவ கவுன்சிலிங்… !

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள மருத்துவ கவுன்சிலிங்… ஆக.14-ல் தொடக்கம்நீட்

நீட்

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கும் என மருத்துவ கவுன்சலிங் குழு அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கு பெற நீட் தேர்வு மதிப்பெண் அவசியம். அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை மருத்துவ கவுன்சலிங் குழு நேற்று வெளியிட்டது.

விளம்பரம்

அதன்படி, எய்ம்ஸ், ஜிப்மர், நிகர் நிலை பல்கலைக்கழகம், மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 விழுக்காடு இடங்களுக்கு 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2 ஆவது சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலும், 3ஆம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5ஆம் வரையிலும் நடைபெற உள்ளதாக மருத்துவ கவுன்சலிங் குழு அறிவித்துள்ளது.

விளம்பரம்

இந்த 3 சுற்றுகளில் நிரப்பப்படாத இடங்கள், இறுதி சுற்று மூலம் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த கலந்தாய்வு அக்டோபர் 16ஆம் தேதி தொடங்குகிறது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
counseling
,
medical counseling
,
neet
,
Neet Exam

You may also like

© RajTamil Network – 2024